ரணில் விக்கிரமசிங்க, நீதிபதிகள் மற்றும் முக்கிய அரச அதிகாரிகள், புலனாய்வுத்துறை அதிகாரிகளுடனான ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த பெரமுனவினர் தற்போது மேலும் ஒலிப்பதிவுகள் வராமல் தடுப்பதற்கு பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய அரசின் ஒரு சில அமைச்சர்களது மனைவியர் மற்றும் நெருங்கியவர்கள், குறிப்பாக பெண்களுடனான உரையாடலினால் இந்நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ரஞ்சன் தரப்பிலேயே அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக விமல் வீரவன்ச தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment