பொன்சேகாவின் அமைச்சு கட்டிடம் பற்றி விசாரணை - sonakar.com

Post Top Ad

Monday, 6 January 2020

பொன்சேகாவின் அமைச்சு கட்டிடம் பற்றி விசாரணை


சரத் பொன்சேகா அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவரது அமைச்சுக்கென ராஜகிரியவில் பெருந்தொகை பணத்தில் வாடகைக்கு பெறப்பட்ட கட்டிடம் தொடர்பில் கோட்டா அரசு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



மாதாந்தம் 12.7 மில்லியன் வாடகைக்கு தனியார் நிறுவனம் ஒன்றிடமிருந்து 2021 வரையான ஐந்து வருட காலப்பகுதிக்குப் பெறப்பட்டிருந்த குறித்த கட்டிடத்தின் மாதாந்த மின்சார கட்டணம் 850,000 ரூபா வரை செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment