இலங்கையின் புதிய வீதி வரை படம், ஜனவரி மாத நடுப்பகுதியில் வெளியிடப்படவுள்ளதாக, அளவீட்டுப் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.பி.ரி. சங்கக்கார தெரிவித்துள்ளார்.
புதிய வீதி வரை படத்தின் நிர்மாணப் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வங்கி மற்றும் அரச நிறுவனங்களை உள்ளடக்கிய பொது இடங்கள் தொடர்பிலான தகவல்கள், அந்த இடங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கங்களுடன், புதிய வீதி வரை படம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வீதி வரை படம் இறுதியாக, 2014 ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-ஐ. ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment