ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் நீண்ட நேரம் சோதனை நடாத்திய பொலிசார் ஈற்றில் அவரது கைத்துப்பாக்கிக்கான அனுமதிப்பத்திரம் காலாவதியாகியிருப்பதாகக் கூறி அவரை கைது செய்துள்ளனர்.
இன்றைய தினம் பி.ப 3 மணி முதல் அவரது வீட்டில் நடந்த சோதனை நடவடிக்கைகளை ரஞ்சன் காணொளியாக வெளியிட்டு ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டிருந்தனர்.
இந்நிலையில், அங்கு அஷு மாரசிங்க, ஹரின் பெர்னான்டோ மற்றும் முஜிபுர் ரஹ்மானும் பிரசன்னமாகியிருந்த நிலையில் ஈற்றில் கைத்துப்பாக்கிக்கான அனுமதிப் பத்திரம் இல்லையென அவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறித்த அனுமதிப்பத்திரம் தொடர்பில் பொலிசார் முன்னிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரியிடம் ரஞ்சன் வினவியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment