ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகள் தலசீமியா நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பிள்ளைகளின் பெற்றோர் சத்திர சிகிச்சைக்காக நிதி உதவி கோரி நிற்கின்றனர்.
பறகஹதெனிய கண்டி வீதி 157/ A என்ற முகவரில் வசிக்கும் எம். ஏ. எம். ஹுஸ்ரி என்வருடைய இரு பிள்ளைகளும் தலசீமியா நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலிஹா என்ற 6 வயது பெண் பிள்ளையும் உமைர் என்ற 2 வயது ஆண் குழந்தையும் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்,
இவர்கள் இருவருக்கும் போன் மெர்ரோ ட்ரான்ஸ்பெலென்ட் எனும் சத்திர சிகிச்சை அவசரமாக செய்வதற்கான ஏற்பாடுகள் கொழும்பு ஆசிரி வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணர் லாலிந்த குணரட்னவினால் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த இரு பிள்ளைகளின் வைத்திய செலவுக்காக சுமார் ரூபாய் 450000.00 வும் மற்றும் 5900000.00 வும் மொத்தமாக ஒரு கோடியே இருபத்தெட்டு இலட்சம் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பிள்ளைகளின் தாய் தந்தையாகள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இரு பிள்ளைகளின் பெற்றோர். சத்திர சிகிச்சைக்காக பண உதவியின்றி பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
இந்த இரு பிள்ளைகளின் ஆரோக்கியமான நல்வாழ்வுக்காக தங்களால் முடிந்த காருண்ணிய உதவிகளைச் செய்துதவுமாறு பெற்றோர் வேண்டிக் கொள்கின்றனர்.
வங்கிக் கணக்கு விபரம்:
மக்கள் வங்கி
முஹம்மது ஹுஸ்ரி முஹம்மது அமீன்
கணக்கு இலக்கம் 199200110022660
தொடர்பிலக்கம்: 0774170119
- தகவல்: இக்பால் அலி
மருத்துவ சான்றிதழ்கள் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னணியில் இச்செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் பயனாளியை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment