ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வின் விசேட பிரதிநிதியாக, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, நேற்றைய தினம் (14) ஓமான் பயணமானார்.
அண்மையில் காலமான ஓமான் அமீர் சுல்தான் காபூஸின் (ஜனாஸா) மரணம் தொடர்பில், அவரது உறவினர்களுக்கும், ஓமான் நாட்டு மக்களுக்கும், இலங்கை ஜனாதிபதி மற்றும் இலங்கை மக்கள் சார்பில் அனுதாபம் தெரிவிப்பதற்காகவே, அவர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஓமான் சென்றுள்ளார்.
ஜனாதிபதியின் சார்பில் இலங்கையிலிருந்து இருவர் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
-ஐ. ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment