சீனாவின் கொரனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ள செங்டு பிராந்தியத்தில் தங்கிக் கல்வி கற்று வரும் சுமார் 150 மாணவர்களை இரு தினங்களுக்குள் இலங்கைக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
விசேட ஸ்ரீலங்கன் விமானம் ஒன்றில் குறித்த மாணவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது பரவி வரும் கொரனா வைரஸ், அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பாகவே மனிதர்கள் இடையே தொற்றுவதாக சீனா தெரிவிக்கின்ற நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment