சீனாவில் மர்மமான முறையில் பரவி வரும் வைரஸ் வகையொன்று உலகின் பல பாகங்களையும் எட்டியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், இலங்கையிலும் coronavirus என அறியப்படும் குறித்த சீன வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
தற்சமயம் மனிதரிலிருந்து மனிதருக்கு இவ்வைரஸ் தொற்றுவதற்கான அறிகுறியெதுவும் இல்லையென சீனா தொடர்ந்தும் மறுத்து வருகிறது. ஆயினும், உலகின் பல பாகங்களில் இவ்வபாயம் நிலவி வருவதோடு ஜப்பானிலும் கண்டறியப்பட்டுள்ளது. இப்பின்னணியிலேயே இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment