தமக்கு மெத்தையொன்று வழங்குமாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விடுத்த கோரிக்கையை சிறைச்சாலை நிர்வாகம் மறுத்துள்ளது.
அத்துடன், மருத்துவரின் சிபாரிசு இருந்தால் மாத்திரமே கைதிகளுக்கு மெத்தை வழங்கப்படும் எனவும் சட்டம் அனைவருக்கும் சமமானது எனவும் ரஞ்சனுக்கு சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொலைபேசி ஒலிப்பதிவுகள் வெளியான சர்ச்சையின் பின்னணியில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை நேற்று வரை அரசியல்வாதிகள் யாரும் சென்று சந்திக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment