இலங்கையில் இருக்கும் சட்டத்தை மாற்றுவதற்கு எந்த அவசியமும் இல்லையென தெரிவிக்கின்ற அமைச்சர் சமல் ராஜபக்ச, சட்ட - ஒழுங்கை முறையாக நிலை நாட்டினாலேயே நாடு நீதியாக இருக்கும் என விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், தமது அரசாங்கம் யாருக்கெதிராகவும் பொய் வழங்குகள் தொடுக்கப் போவதில்லையெனவும், அதற்கேற்ப சட்டங்களை மாற்றப் போவதில்லையெனவும் இன்றைய தினம் பதகிரிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்துள்ளார்.
2015ல் ஆட்சி மாற்றம் உருவானதன் பின் பல்வேறு சட்ட மாற்றங்கள், புதிய பொலிஸ் பிரிவுகள் உருவாக்கப்பட்ட போதிலும் நீதியான நாட்டை உருவாக்க முடியவில்லையெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment