சம்பிக ரணவக்க அமைச்சராகப் பதவி வகித்ததன் போது இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடமும் குற்றப் புலனாய்வுப் பிரவினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
குறித்த விபத்துக்குத் தானே காரணம் என சம்பிக்கவின் சாரதி பொலிசில் சரணடைந்த போதிலும், சம்பிக்கவே குறித்த சந்தர்ப்பத்தில் வாகனத்தை செலுத்தியதாக பாதிக்கப்பட்டவர் தரப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின் சம்பிக்க இப்பின்னணியில் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, சம்பவ தினம் சம்பிக்கவிடமிருந்து பொலிஸ் மா அதிபருக்கும் தொலைபேசி அழைப்பொன்று மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்து அது தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பூஜிதவிடம் விசாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment