அமெரிக்கா - ஈரான் பதற்றத்தின் நடுவே உக்ரைன் விமான சேவையின் பயணிகள் விமானம் ஒன்று ஈரானில் வீழ்ந்து சுமார் 176 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில், அவ்விமானத்தை ஈரானே சுட்டு வீழ்த்தியுள்ளதாக கனேடிய பிரதமர் முதலில் தகவல் வெளியிட்டிருந்ததோடு பல நாடுகள் அதனை ஆமோதித்திருந்தன. எனினும், முதலில் மறுத்திருந்த ஈரான் இன்று காலை தமது இராணுவத்தினரால் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டு விட்டதாக கவலை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்க தகவல்களையும் நிராகரித்திருந்த உக்ரைன் விமானம் இயந்திர கோளாறு காரணமானவே வீழ்ந்ததாக ஈரானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தமையும் குறித்த விமானத்தில் கனேடிய, ஈரானிய மற்றும் ஐக்கிய இராச்சிய பிரஜைகளும் பயணித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment