கொரோனா வைரஸ் அச்சம் பரவியுள்ள நிலையில் கொழும்பு, புறக்கோட்டையில், இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 34,000 தரக்குறைவான முகமூடிகள நுகர்வோர் அதிகார சபையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
முகமூடி இறக்குமதிக்கான அனுமதியும் இல்லாத நபர்களினால் இந்தியா மற்றும் சீனாவிலிருந்து இவ்வாறு தரக்குறைவான முகமூடிகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் முகமூடிகளுக்கு நிலவும் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி முகமூடிகள் 500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதைத் தொடர்ந்து அரசு, இதற்கான விலைக்கட்டுப்பாட்டை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment