இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள நீதிபதி கிஹான் பிலபிட்டியவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார் சட்டமா அதிபர்.
ரஞ்சன் ராமநாயக்கவுடனான தொலைபேசி உரையாடலின் பின்னணியில் மூன்று நீதிபதிகள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளதோடு இருவர் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பிலபிட்டியவை கைது செய்ய முன்பதாக தொழிநுட்பரீதியாக குரல் பதிவுகளை உறுதி செய்து கொள்ள வேண்டிய தேவையிருப்பதாகவும் பொலிசாருக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment