11 இளைஞர்கள் பேர் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையில் சாட்சிகளை பாதிக்கும் வகையிலும் நீதித்துறைக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன மற்றும் இரு இராணுவ புலனாய்வு அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கூடுதல் மஜிஸ்திரேட் முன்னிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்திருந்த நிலையில், அஜித் பிரசன்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை மனுவை நிராகரித்த நீதிபதி, பிணை வழங்குவதற்கான அதிகாரம் தனக்கில்லையென தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகள் அவசியப்படுவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பதிலளித்திருந்த நிலையில் விளக்கமறியல் பெப்ரவரி 14ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment