பாடசாலைகளுக்கும் 'இசட் ஸ்கோர்' நடைமுறை - sonakar.com

Post Top Ad

Tuesday, 14 January 2020

பாடசாலைகளுக்கும் 'இசட் ஸ்கோர்' நடைமுறை


பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்களுக்கான இசட் ஸ்கோர் நடைமுறை, பெப்ரவரி மாதம் முதல் பாடசாலைக் கட்டமைப்பிலும் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 


தற்போது பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும்போது, திறமை அடிப்படையில் இணைத்துக் கொள்வது 40 சதவீதமாகவும், மாவட்ட அடிப்படையில் 55 சதவீதமாகவும் உள்ளன. 

பின்தங்கிய பிரதேச அடிப்படையில் 5 சதவீதத்திற்குப் பதிலாக, பாடசாலைக் கட்டமைப்பில் 60 சதவீதம் பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்கு உள்வாங்கப்படும் என்றும், கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதியின் சுபீட்சம்மிக்க தொலைநோக்கு வேலைத்திட்டத்தின் கீழ், விசேட தேவையைக் கொண்டுள்ள மாணவர்களுக்கு கல்விக்கான சந்தர்ப்பம் விரிவுபடுத்தப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் தலையீடுகள் இன்றி, பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதற்குத் தேவையான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.    புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ், அதிபர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

-ஐ. ஏ. காதிர் கான்

No comments:

Post a Comment