நாட்டில் இயங்கும் அனைத்து மதரசாக்களையும் முஸ்லிம் விவகார அமைச்சின் கீழ் பதிவு செய்தாக வேண்டும் என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
அத்துடன் மதரசாக்களில் கற்பிக்கப்படும் பாட விடயங்கள் குறித்தும் தீவிர அவதானம் செலுத்தப்பட்டு அவை நெறிப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சின் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார் பிரதமர்.
இலங்கையில் முஸ்லிம்களுக்குக் கற்பிக்கப்படும் விடயங்களை நெறிப்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக பொது பல சேனாவின் ஞானசாரவும் பகிரங்கமாக அறைகூவல் விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment