சீனாவில் பாரிய ஆட்கொல்லியாக உருவெடுத்துள்ள கொரொனா வைரஸ் உலக அளவில் பரவி வரும் நிலையில் இது குறித்து ஆராய்ந்த உலக சுகாதார மையம் உலக சுகாதார அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
சீனா வெளியிட்ட இறுதி தகவலின் அடிப்படையில் 170 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை 7700க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை மேலும் 18 நாடுகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று உலக சுகாதார மையம் இது குறித்து ஆராய்ந்திருந்தது.
வெளிநாடுகளில் இதுவரை 98 பேர் வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment