கொரொனா வைரஸ் பாதிப்பின் பின்னணியில் முகமூடிகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ள நிலையில், சுகாதார தேவைகளைக் கருத்திற் கொண்டு அரசு பொது மக்களுக்கு இலவசமாக முகமூடிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் சீனாவிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ள மாணவர்கள் பிரத்யேக கண்காணிப்பின் கீழ் தியத்தலாவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் ஏகத்துக்கும் விலையேற்றப்படுவதால் முகமூடியின் உ ச்ச பட்ச விலை 15 ரூபாவாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment