சீனாவின் கொரோனா ஆட்கொல்லி வைரஸ் இலங்கையை அடைந்துள்ள நிலையில், முகமூடிகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. அத்துடன், அதிக விலையிலும் முகமூடிகள் விற்கப்படுவதால் விலைக்கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது சுகாதார அமைச்சு.
இதனடிப்படையில் உபயோகப்படுத்திவிட்டு வீசக்கூடிய முகமூடியின் உச்ச கட்ட விலை 15 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சந்தை விலைக்கு அதிகமாக விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment