ஐக்கிய தேசியக் கட்சி தலைமைத்துவ விவகாரம் தொடர்ந்தும் இழுபறிக்குள்ளாகியுள்ள நிலையில் கட்சி சார்ந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரையும் நாளைய தினம் கொழும்புக்கு அழைத்து கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கான முயற்சி சஜித் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கிய போதிலும் கட்சித் தலைவர் பதவியை சஜித்துக்கு தருவதற்கு ரணில் தயங்கி வருவதால் இழுபறி தொடர்கிறது.
நேற்று வெள்ளிக்கிழமை தீர்வொன்று கிட்டும் என எதிர்பார்க்கப்பட்ட பொதிலும் தொடர்ந்தும் இவ்விவகாரம் இழுபறிக்குள்ளாகியுள்ளதோடு மேலும் ஒரு வாரம் தாமதமாகும் என ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment