ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இடையே பனிப்போர் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர.
19ம் திருத்தச் சட்டத்தை நீக்குவது தொடர்பிலேயே இந்த உள்வீட்டுப் பிரச்சினை நடந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கும் அவர், அதனை நீக்கினால் மஹிந்த செல்லாக் காசாகி விடுவார் என்பதால் மஹிந்த அணி அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த சட்டத்திருத்தம் அமுலில் இருந்தாலேயே மஹிந்த ராஜபக்ச பிரதமராக மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment