பொலிசார் சுயாதீனமாகவே செயற்படுவதாகவும் அரசாங்கம் மக்கள் சேவையில் சுயாதீனமாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார் அமைச்சர் டலஸ் அழகப்பெரும.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதோடு இருவர் ஏலவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சுயாதீனமான பொலிஸ் வேண்டுமென்று மக்கள் ஆணையிட்டதால் தற்போது பொலிசார் சுயாதீனமாக செயற்படுவதாகவும் அவர் விளக்கமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment