போலி காணி உறுதிப் பத்திரம் ஒன்றைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 78 ஏக்கர் காணி விற்ற குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரனும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ரிப்கான் பதியுதீனுக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதிவான் மன்றில் இன்றைய விசராரணையின் பின் குறித்த நபருக்கு பெப்ரவரி 6ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
ரிப்கான் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக நிலவி வருவதுடன் அவ்வப்போது அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாவதும் அதனை ரிசாத் மறுப்பதுமாக இருந்த தொடர்ச்சியில் இவ்வாறு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment