மரம் வெட்டுவது எங்கள் வேலையில்லை, அதைச் செய்து பிழைப்பு நடத்துவதும் இல்லையென வில்பத்து தொடர்பில் தமது நிலைப்பாட்டை விளக்கி ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் ரிசாத் பதியுதீன்.
ரணில்-மைத்ரி கூட்டரசிலன்றி மஹிந்த அரசிலேயே மக்கள் மீள்குடியேறுவதற்காக மீண்டும் தமது சொந்த இடங்களுக்குச் சென்றதாகவும் அதன் பின் காடழித்ததாக அவர்களே குற்றஞ்சாட்டியுள்ளதாகவும் நேற்றைய தினம் மட்டக்குளியில் வைத்து சுட்டிக்காட்டிய அவர், முடிந்தால் ஆணைக்குழு அமைத்து விசாரிக்குமாறு தான் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
தேர்தல் காலங்களில் தொடர்ச்சியாக வில்பத்து விவகாரம் தலையெடுப்பதும் பின்னர் அது மறைந்து போவதும் கடந்த கால வரலாறாகத் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment