இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் எட்டாவது நாடாளுமன்றத்தின் சம்பிரதாயபூர்வமான நான்காம் தவணை இன்று ஆரம்பமான நிலையில் சபை அமர்வுகளின் இறுதியில் நாடாளுமன்ற அமர்வினை எதிர்வரும் செவ்வாய் 7ம் திகதி பி.ப 1 மணி வரை ஒத்தி வைத்துள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய.
சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ள அதேவேளை கெஹலிய ரம்புக்வெல மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் அரச பேச்சாளர்களாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி தனது சம்பிரதாயபூர்வ கன்னி உரையை இன்று நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment