58 மில்லியன் ரூபா பெறுமதியான 65 தங்க பிஸ்கட்டுகளை தனது உடலில் மறைத்து வைத்து வெளியே கொண்டு வர முயன்ற விமான நிலைய ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குருநாகலைச் சேர்ந்த 41 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் பற்றி முன் கூட்டியே தகவல் கிடைக்கப் பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தலா 100 கிராம் எடையுள்ள 65 பிஸ்கட்டுகளை உடலில் மறைத்து வைத்து கடத்த முற்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment