ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பதவி தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலவி வருகின்ற அதேவேளை 52 பேர் தொடர்ந்தும் சஜித்தை தலைவராக்குவதை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அடுத்த வாரம் ரணில் - கரு மற்றும் சஜித் இடையேயான சந்திப்பொன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சித் தலைமைப் பதவியையும் பெற்ற பின்னரே முழு அளவில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியம் என சஜித் தரப்பு தெரிவித்து வருகின்ற அதேவேளை கட்சியின் எதிர்காலம் குறித்த தெளிவான செயற்திட்டம் ஒன்று இன்னும் முன் வைக்கப்படவில்லையென ரணில் தரப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment