ஈரான் இராணுவ தளபதி கசம் சுலைமானியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பெருந்திரளானோர் கூடிய நிலையில் சன நெரிசலில் அகப்பட்டு 50 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவினால் கொலை செய்யப்பட்டுள்ள சுலைமானியின் இறப்பு ஈரானிய மக்களிடையே ஒற்றுமையைத் தூண்டியுள்ள அதேவேளை பிராந்தியத்தில் அமெரிக்க எதிர்ப்பு உணர்வு மேலோங்கியுள்ளது.
இந்நிலையில் அவரது இறுதிக்கிரியைகளின் போது ஏற்பட்ட சன நெரிசலில் 200 பேர் வரை காயமுற்று 50 பேர் உயிரிழந்துள்ளதாக இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment