சீனாவில் பரவி வரும் கொரனா வைரஸ் வகையினால் இதுவரை அங்கு 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் எட்டு நகரங்களில் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் மனிதரிலிருந்து மனிதனுக்கு இந்நோய் தொற்ற மாட்டாது என தெரிவித்து வந்த சீன அரசு தற்போது நகரங்களை முடக்கியுள்ள அதேவேளை சர்வதேச ரீதியில் குறித்த வைரஸ் தொடர்பில் அவதானம் நிலவி வருகிறது.
சீனாவின் வுஹான் நகருக்குச் சென்று வந்த பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ஐரோப்பிய நாடுகளில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்ற அதேவேளை, ஆசிய நாடுகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன.
No comments:
Post a Comment