ஆட்சியதிகாரத்தைப் பெற்றுள்ள போதிலும் அரசாங்கத்தின் திட்டங்களை முன்னெடுக்க போதியளவு பணம் இல்லையென்று தெரிவிக்கிறார் அமைச்சர் W.D.J செனவிரத்ன.
மூன்றிலிரண்டு பெரும்பான்மையுள்ள அரசு அமைந்தால் மாத்திரமே தேவையான வகையில் திட்டமிட்டு அரசைக் கொண்டு செல்ல முடியும் எனவும் மல்வலயில் நேற்று இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பில் வைத்து அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை போன்ற ஒரு நாட்டைக் கொண்டு நடாத்த அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கட்டாயம் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ள அதேவேளை எதிர்வரும் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கப் பெற்றதும் 19ம் திருத்தச் சட்டத்தை நீக்கப் போவதாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பெரமுன முக்கியஸ்தர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment