2019ம் ஆண்டின் நாடாளுமன்ற அமர்வுகளில் 94வீதம் பங்கேற்று, சபை நடவடிக்கைகளிலும் பங்களித்த 10வீத நாடாளுமன்ற உறுப்பினர்களுள் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானும் இணைந்து கொண்டுள்ளார்.
இதனடிப்படையில் 225 உறுப்பினர்களுள், கடந்த வருட செயற்பாடுகளின் அடிப்படையில் அவர் 23வது இடத்தைப் பிடித்திருப்புதோடு கொழும்பு மாவட்டத்தின் 19 உறுப்பினர்களுள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு (6) அடுத்ததாக ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளார்.
இதேவேளை, நீதி - சட்ட ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு விவகார விவாதங்களில் முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு சிறப்பாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment