19ம் திருத்தச் சட்டத்தினால் நாட்டின் அரசியலில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருவதாக தெரிவிக்கிறார் கெஹலிய ரம்புக்வெல.
குறித்த சட்டமூலத்தை உருவாக்கியவரான டொக்டர் ஜயம்பதியும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்ற கெஹலிய, அதனைத் திருத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாக தெரிவிக்கிறார்.
தாம் ஆட்சிக்கு வந்ததும் 19ம் திருத்தச் சட்டத்தை நீக்கப் போவதாக ராஜபக்ச குடும்பத்தினர் தெரிவித்து வந்திருந்த அதேவேளை 18ம் திருத்தச் சட்டத்துக்கமைவாக ஒரே நபர் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment