பிணையில் விடுவிக்கப்பட்ட ரஞ்சனிடம் 17ம் திகதியும் விசாரணை - sonakar.com

Post Top Ad

Sunday, 5 January 2020

பிணையில் விடுவிக்கப்பட்ட ரஞ்சனிடம் 17ம் திகதியும் விசாரணை


காரணம் எதுவும் குறிப்பிடப்படாத சோதனை அனுமதியுடன் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டுக்கு நேற்றைய தினம் சென்ற பொலிசார் பல மணி நேர சோதனை நடவடிக்கையின் பின்னர் அவரது துப்பாக்கி அனுமதிப் பத்திரம் புதுப்பிக்கப்படாதமையைக் காரணம் காட்டி கைது செய்திருந்தனர்.



இன்றைய தினம் ரஞ்சனுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள போதிலும் மீண்டும் அவரை 17ம் திகதி விசாரிக்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர் பொலிசார். 

பொதுவாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு பிரிவினரே ஆயுதங்களைக் கையாண்டு வருகின்ற நிலையில் தாம் அது தொடர்பிர் கவனம் செலுத்தியிருக்கவில்லையென ரஞ்சன் தெரிவித்துள்ள அதேவேளை அவருக்கு வெளிநாட்டு பிரயாணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

சம்பிக்க, ராஜிதவையடுத்து மூன்றாவது ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு வெளிநாட்டு பிரயாணத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment