சஜிதி பிரேமதாசவின் விளம்பர நிகழ்வுகளை ஒளிபரப்பியதன் பின்னணியில் ரூபவாஹினிக்கு சஜித் பிரேமதாச 150 மில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2018 மார்ச் மாதம் முதல் 2019 செப்டம்பர் மாதம் வரையிலான வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பிலான விளம்பரங்களின் பின்னணியிலேயே இத்தொகை செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அமைச்சர் பந்துலவிடம் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிறுவனத்தின் தலைவரை இதற்குத் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment