சீனாவில் ஆரம்பித்த கெரோனா வைரஸ் இதுவரை 15 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்நிலையில் குறித்த வைரஸ் பாதிப்பினால் சீனாவில் உயிரிழந்தோர் தொகை 170 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கை - இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் உட்பட வெளிநாடுகளில் பாதிப்புக்குள்ளானோரின் தொகை குறைவாகவே இருக்கின்ற போதிலும் அவசர நிலை பிரகடனப்படுத்துவது குறித்து உலக சுகாதார மையம் இன்று முடிவெடுக்கவுள்ளது.
நேற்றைய தினத்தின் தகவல் அடிப்படையில் சீனாவில் 7700க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை சீனாவின் அனைத்து பிராந்தியங்களுக்கும் குறித்த வைரஸ் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment