ஹார்ட் டிஸ்க் முச்சக்கர வண்டி சாரதிக்கு 1 மில்லியன் பரிசு! - sonakar.com

Post Top Ad

Sunday, 12 January 2020

ஹார்ட் டிஸ்க் முச்சக்கர வண்டி சாரதிக்கு 1 மில்லியன் பரிசு!


ரஞ்சன் ராமநாயக்கவின் ஒலிப்பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கை பொலிசாரிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படும் முச்சக்கர வண்டி சாரதிக்கு 1 மில்லியன் ரூபா பரிசாக வழங்கப் போவதாக அறிவித்தள்ளது முச்சக்கரவண்டிகள் சுயதொழிலிலாளர்களுக்கான சங்கம்.



ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டிலிருந்து பொலிசாரால் கைப்பற்றப்பட்டிருந்த சிடிக்களிலேயே ஒலிப்பதிவுகள் இருந்ததாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்ட போதிலும் அவற்றை பெரமுன உறுப்பினர்களும் கடும்போக்கு பௌத்தவாத அமைப்புகளுமே சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிட்டு வந்தன.

இந்நிலையில், பொலிசாரின் பொறுப்பிலிருந்த சிடிக்கள் வெளியில் சென்றதெப்படி? என நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார் ரஞ்சன். எனினும், அதனைத் தொடர்ந்து முச்சக்கர வண்டி சாரதியொருவர் ஹார்ட் டிஸ்க் ஒன்றைக் கொண்டு வந்து தந்ததாகவும் அதன் பிரதி வெளியில் இருக்கக் கூடும் எனவும் பொலிசார் மறுப்பு வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே இவ்வாறு சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment