தலைமைத்துவத்தின் அதிகாரங்களை மீள் பரிசீலிக்கும் UNP - sonakar.com

Post Top Ad

Monday, 16 December 2019

தலைமைத்துவத்தின் அதிகாரங்களை மீள் பரிசீலிக்கும் UNP


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கு இருக்கும் அதிகாரங்களை மீள் பரிசீலனைக்குட்படுத்த சட்ட வல்லுனர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க.



கட்சியின் தலைமைத்துவம் சஜித்துக்கு தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ள நிலையில் ஐ.தே.கட்சியின் எதிர்காலம் பாரிய இழுபறிக்குள்ளாகியுள்ளது. தலைவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவர் ஆறு வருடங்களுக்கு அப்பதவியில் நீடிக்க முடியும் எனினும், தானாக விரும்பினாலன்றி ஒருவரை அப்பதவியிலிருந்து நீக்க முடியாத படியே தற்போதைய விதிமுறை உள்ளது.

இந்நிலையிலேயே, ரணில் இவ்வாறு தலைமைத்துவத்துக்கான அதிகாரங்களை மீள் பரிசீலனை செய்ய உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment