எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை தேவைப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சிக்கே ஆதரவளிக்கப் போவதாக தெரிவிக்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ள அதேவேளை, ஆட்சியமைக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தேவைப்படுமிடத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு கை கொடுக்கும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறையில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட அமர்வின் போது எம்.ஏ சுமந்திரன் இத்தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment