UK: லுக்மான் ஹரீஸின் Wisdom at our Doorstep நூல் வெளியீடு - sonakar.com

Post Top Ad

Sunday, 8 December 2019

UK: லுக்மான் ஹரீஸின் Wisdom at our Doorstep நூல் வெளியீடு



சோனகர்.கொம் பத்தி எழுத்தாளரும் பிரபல சமூக சேவகரும் எழுத்தாளருமான ஐக்கிய இராச்சியம், ரெடிங்கில் வசிக்கும் லுக்மான் ஹரீசின் Wisdom at our Doorstep எனும் தலைப்பிலான புதிய நூல் நேற்றைய தினம் ரெடிங்கில் வெளியிடப்பட்து.



நீதிக் கதைகள், பழமொழிகள் மற்றும் நல்லொழுக்க நம்பிக்கைளின் தொகுப்பாக இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ள அதேவேளை ஏலவே இவ்வருடம், கொழும்பில் இந்நூல் வெளியிடப்பட்டிருந்தது.

நேற்றைய நிகழ்வில் டொக்டர் பெரோஸ் முபாரக் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த அதேவேளை, சோனகர்.கொம் பிரதம ஆசிரியர் இர்பான் இக்பால் நூல் மதிப்பீட்டினை மேற்கொண்டிருந்தார். 

சமூக மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர். Wisdom at our Doorstep,  நூலாசிரியரின் ஐந்தாவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

Photos: Baazir

No comments:

Post a Comment