புதிய முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு: SLPP - sonakar.com

Post Top Ad

Saturday, 7 December 2019

புதிய முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு: SLPP



தற்போது இருக்கும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளில் பெரும்பாலானோர் சஜித் பிரேமதாசவை ஆதரித்திருந்ததாலேயே அவர்களுக்கு பெரமுன அமைச்சரவையில் இடம் தரப்படவில்லையென தெரிவிக்கின்ற அமைச்சரரைவப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன, புதிய பிரதிநிதிகளை எதிர்வரும் காலத்தில் இணைத்துக் கொள்ளப் போவதாக விளக்கமளித்துள்ளார்.

பெரமுன ஆட்சியில் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் இல்லையென்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபே ராஜபக்சவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த முஸ்லிம் பிரதிநிதிதிகளும் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்கதக்து.

No comments:

Post a Comment