ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவை அல்லது அவருக்கு நெருங்கிய குடும்ப உறுப்பினரைக் கொலை செய்தால் வெளிநாடு ஒன்றில் நல்ல வாழ்க்கையைப் பெறலாம் என வேறு நபர்களிடம் தெரிவித்ததன் பின்னணியில் ஜனாதிபதியைக் கொலை செய்யத் திட்டம் தீட்டிய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபருக்கு அநுராதபுர மாவட்ட ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வாழைச்சேனையைச் சேர்ந்த ஹக்கீம் முஹமது ரிப்கான் என அறியப்படும் நபரே இவ்விவகாரத்தில் பிரதான சந்தேக நபராகக் கருதப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்ற அதேவேளை ஏனைய மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் வசமிருந்து பல மொபைல் சிம் கார்டுகள், பல பேஸ்புக் கணக்குகள் உட்பட பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற அதேவேளை, கைதான போதும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரை சந்தேக நபர் தொடர்பு கொண்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment