ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவை அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்யும் நோக்கில் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சி.ஐ.டியினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
கட்டுநாயக்க பொலிசாரினால் கைது செய்யப்பட்ட வாழைச்சேனையைச் சேர்ந்த நபர் ஒருவர் (26) ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விவகாரத்தின் பின்னணியில் நால்வர் கைது செய்யப்பட்டிருந்த அதேவேளை பிரதான சந்தேக நபர் தவிர்ந்த ஏனையோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment