சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லையென தெரிவிக்கிறது குற்றப் புலனாய்வுப் பிரிவு.
சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் இலங்கைப் பெண் ஒருவர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு, முன்னாள் குற்றப்புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் நிசாந்த சில்வாவின் வெளியேற்றம் பற்றிய தகவல் கோரி மிரட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
நான்கு நாட்கள், பல மணி நேரம் குறித்த நபரை விசாரித்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெறவில்லையென தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment