குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஒரு கோழையென தெரிவிக்கிறார் கெஹலிய ரம்புக்வெல.
சட்டம், நீதி, நியாயம் என கடந்த ஆட்சியில் வாய் கிழியப் பேசிய போதிலும் தமக்கெதிரான குற்றச்சாட்டு ஒன்றை எதிர்கொள்ள முடியாமல் ஒளிந்து திரிந்ததன் ஊடாக ராஜித தனது இயலாமையை வெளிக்காட்டியுள்ளதாகவும் கெஹலிய மேலும் தெரிவிக்கிறார்.
நேற்றிரவு வைத்தியசாலையில் அனுமதி பெற்றிருந்த ராஜித இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 30ம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment