ஏப்ரல் 21 தாக்குதல்களையடுத்து இனங்களுக்கிடையில் முறுகலை உருவாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள பொலிஸ் உளவாளி நாமல் குமாரவுக்கு எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டு பரபரப்பை உருவாக்கியிருந்த குறித்த நபர், இனவாத சக்திகளுடன் இணைந்து செயற்பட்டு வந்திருந்தவராவார்.
இந்நிலையில், ஏப்ரல் அசம்பாவிதத்தின் போது ஹெட்டிபொல மற்றும் நிக்கவரட்டிய பகுதிகளில் இன முறுகலை தோற்றுவிப்பதில் பங்களித்ததாக குறித்த நபருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment