ராஜித மீண்டும் தனியார் வைத்தியசாலையில் - sonakar.com

Post Top Ad

Sunday, 29 December 2019

ராஜித மீண்டும் தனியார் வைத்தியசாலையில்


சிறைச்சாலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல முயன்ற போதிலும் ராஜிதவின் உடல் நலன் கருதி மீண்டும் அவர் தனியார் வைத்தியசாலையிலேயே பாதுகாப்புக்கு மத்தியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள் பலர் இன்று வைத்தியசாலைக்குச் சென்ற போதிலும் ராஜிதவை நேரில் கண்டு பேச முடியாமல் போய் விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, விசேட வைத்தியரின் அனுமதியின்றியே ராஜிதவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்ற முயன்றதாகவும் பின்னர் வைத்தியசாலை நிர்வாகத்தின் தலையீட்டிலேயே அவர் மீண்டும் தனியார் வைத்தியசாலையிலேயே தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment