வெள்ளை வேனில் கடத்தப்பட்டு, முன்னாள் குற்றப்புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் நிசாந்த சில்வாவின் விபரம் கேட்டு மிரட்டப்பட்டதாகக் கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் ஊழியருக்கு வெளிநாட்டுப் பிரயாணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என பொலிசார் தூதரகத்தை அணுகியிருந்த நிலையில் தற்போது இத்தடை விதிக்கப்பட்டுள்ளமு.
தூதரக ஊழியர் எனும் அடிப்படையில் குறித்த பெண் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்படுவதைத் தடுக்கக் கூடாது என வலியுறுத்தி முன்னாள் மேஜர் அஜித் பிரசன்ன தூதரகம் முன்பாக கவனயீர்ப்பிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment