மீராவோடையில் மீண்டும் காபட் இடும் வேலைகள் ஆரம்பம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 25 December 2019

மீராவோடையில் மீண்டும் காபட் இடும் வேலைகள் ஆரம்பம்


கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு உட்பட்ட மீராவோடை பிரதான வீதியில் இடப்பட்டு வந்த காபட் வேலைகள் சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.


குறித்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காபட் இடும் வேலைகள் செவ்வாய்க்கிழமை (24) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஓட்டமாவடி சுற்றுவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் வேலைத்திட்டம் தற்போது ஓட்டமாவடி ஜும்ஆ பள்ளி வீதி, மீராவோடை வீதி, மார்கட் வீதி ஆகிய இடங்கள் வரைக்கும் காபட் வேலைகள் நிறைவு பெற்றுள்ளன.

-எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment