காளான் பயிர்ச் செய்கையின் மூலம் இலங்கையில் விவசாயிகள் பாரியளவில் வருமானத்தை ஈட்ட முடியும். அதிகளவு சந்தை வாய்ப்பு பெற்றுக் கொள்ளக் கூடிய துறையாக காளான் பயிர்ச் செய்கை விளங்குகின்றன. அதற்கான தொழில் நுட்ப உதவிகளையும் நிதி உதவியினையும் அரசாங்கம் வழங்கி வருவதாக என்று வடமேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் தெரிவித்தார்.
தம்பதேனிய காளான் விவசாயிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நாரம்மல பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட காளான் விவசாயிகளின் நலனுக்காக, மாகாண விவசாய அமைச்சின் வழிகாட்டலின் கீழ், பாதுகாப்பான, தரமான விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இரண்டு மில்லியன் ரூபாய் பணம், 40 உறுப்பினர்களுக்கு மானியமாக வழங்கப்பட்டது. இந் நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, வடமேல் மாகாண செயலாளர் .டீ.ஆ. சிறிசேன, மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திருமதி. கீதா தர்மசிறி உள்ளிட்ட பலர் கொண்டனர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட வடமேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், களான் உணவு வகை என்பது மிகவும் போசாக்கு மிக்க உணவு வகையாகும். ஐந்து நட்சத்திர ஹொட்டல்களுக்குச் சென்றால் காலை உணவாக இதுவாகவே இருக்கும். சினா நாட்டு உணவகத்துக்குச் சென்றாலும் அது புறம்பாக இருக்கும். சரியான முறையில் இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றால் சாத்தியப்படான வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்தக் களான் பயிர்ச் செய்கை தொடர்பாக கமநல சேவைகள் அதிகாரிகள் விவசாயிகளுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். விவாசயத்துறையிலுள்ளவர்கள் இந்த காளான் உற்பத்தி துறையின் மூலம் எந்தளவுக்கு அறுவடைகளைப் பெற்றுக் கொள்கின்றார்களோ அந்தளவுக்கு சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதில் எந்தவிதமான தடைகளும் இருக்காது. விற்பனை செய்ய முடியாவிட்டால் நான் அத்தனையையும் பெற்றுக் கொள்வதற்குத் தயாராக இருக்கின்றேன். அந்தளவுக்கு சந்தை வாய்ப்பு அதிகம் இதற்கு இருக்கிறது. இது சிறந்த உணவு வகையாகும்.
அந்த வகையில் இந்த விசேட வேலைத் திட்டம் சிறந்த முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த உதவி கடன் அடிப்படையில் வழங்கப்பட வில்லை. இன்னும் ரூபா இருதாயிரம் வழங்கத் தயாராக இருக்கின்றோம். அந்த நிதி வந்தவுடன் வழங்குவோம். இந்த நிதி எந்நாளும் கிடைப்பதில்லை. இந்த விசாயத்துறையை சிறந்த முறையில் எல்லோரும் ஒன்று பட்டு செய்தால் இதன் மூலம் மென்மேலும் முன்னேற்றத்தை அடையலாம்.
எனவே இந்த களான் விவசாயத் துறையை ஊக்குவிப்பதற்காக நிதி உதவி, தொழில் நுடப் அறிவு எல்லாம் வழங்கப்படுகின்றன. தங்களுடைய அர்ப்பணிப்பான சேவையே தேவை. இந்தப் பணவுதவியை எடுத்துக் கொண்டு சென்றுவேறு காரியங்களில் ஈடுபடாமல் இப்பயிர்ச் செய்கை திறன்பட மேற்கொள்ளுமாறு அவர் மேலும் வேண்டுகோள் விடுத்தார்.
-இக்பால் அலி
No comments:
Post a Comment